தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
குளச்சல் அருகே கோவிலில் கொள்ளையை தடுக்க முயன்ற தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குளச்சல்:
குளச்சல் அருகே கோவிலில் கொள்ளையை தடுக்க முயன்ற தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி கொலை
குளச்சல் அருகே உள்ள வெட்டுமடையில் இசக்கியம்மன் கோவிலில் கடந்த மாதம் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற தொழிலாளி கணேசன் (வயது55) என்பவரை கொள்ளையர்கள் கொடூரமாக தாக்கினர். இதில் கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குளச்சல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கொட்டில்பாடை சேர்ந்த கவாஸ்கர் (25) என்பவரை தனிப்படை போலீசார் சில நாட்களுக்கு முன்பு முட்டம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சதீஷ் (25) என்பரை ேபாலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கொடைக்கானலில் வைத்து சதீஷ் (25) போலீசார் கைது செய்தனர். இவர் நெல்லை மாவட்டம் களக்காடு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கவாஸ்கர், சதீஷ் இருவரும் சிறையில் இருந்த போது நண்பர்கள் ஆகினர். பின்னர் வெளியே வந்ததும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், வெட்டுமடை கோவிலில் கொள்ளைைய தடுக்க முயன்ற தொழிலாளி கணேசனை தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சதீசை போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.