நெல்லையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது


நெல்லையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 May 2023 12:30 AM IST (Updated: 8 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், அரசு டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் நெல்லையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

டாக்டர் வீட்டில் கொள்ளை

பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயக்குமார் (வயது 55). பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர். இவர், கடந்த மாதம் 14-ந்தேதி வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் உதயக்குமாரை கத்தியால் குத்தி கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக பழனி பெரியகடைவீதியை சேர்ந்த சரவணக்குமார் (41), நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்த சங்குபாண்டி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சரவணக்குமாரிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம், 34 பவுன் தங்க கட்டி, 5 கிலோ வெள்ளி பொருட்களும், சங்குபாண்டியிடம் 15 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒருவர் கைது

இந்நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் (23) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, டாக்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என்றனர்.


Related Tags :
Next Story