தந்தை- மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
பாளையங்கோட்டையில் தந்தை- மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அண்ணாநகர் அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 50). விவசாயி. இவரின் மகன் தானு (18). கல்லூரி மாணவர். கிருஷ்ணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் சண்முகத்தாய் என்பவருக்கும் பணம் பிரச்சினை இருந்துள்ளது. இதுதொடர்பாக சம்பவத்தன்று சண்முகத்தாயின் மருமகனான ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த தோல் முட்டைக்குமார் (28) என்பவர் கிருஷ்ணன், அவருடைய மகன் தானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலைசெய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தாயின் மகன் வள்ளிநாயகம், தோல் முட்டைக்குமாரின் உறவினர் மகேஷ் ஆகியோரை கைது செய்தனர். நேற்று இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சின்னமூலைக்கரைப்பட்டியை சேர்ந்த குமரேசன் என்ற கொம்பையாவை (28) போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.