தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு..!
தூத்துக்குடியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பார்த்திபன் (54) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பார்த்திபனுக்கு இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story