மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் வாட்ச் கடை வைத்து உள்ளார்.
இவர் இன்று மதியம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை காஞ்சியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வெளியே வந்தார்.
அப்போது காஞ்சி சாலையில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கணேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
மேலும் உயிரிழந்த கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.