சாலை விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்


சாலை விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்
x

சாலை விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

கரூர் கோயம்பள்ளியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவர் தனது ஊரில் இருந்து லாரியை எடுத்து கொண்டு வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து, மூலிமங்கலம் திருப்பத்தில் திரும்பினார். அப்போது, கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற பரமத்தி வேலூர் வடக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் (58) என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story