தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டி
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 24). கூலிதொழிலாளி. இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்தார். பின்னர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிறுமியை திருமணம் செய்த விஜயகுமாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story