சின்னவெங்காயம் சாகுபடி பணி மும்முரம்


சின்னவெங்காயம் சாகுபடி பணி மும்முரம்
x

குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி பணி மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர்


குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி பணி மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

சின்ன வெங்காயம்

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைக்க40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் நடவு செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிகம் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

பட்டறை வெங்காயம்

வெங்காய சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-

ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் என ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்ன வெங்காயம் 4 முதல் 5 மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் விலை குறைவான நேரங்களில் இருப்பு வைத்து விலை அதிகமான நேரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைத்து வருகிறது. சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story