தோட்டக்கலைத்துறை திட்டங்களில் பயன்பெற இணையதள பதிவு கட்டாயம்


தோட்டக்கலைத்துறை திட்டங்களில் பயன்பெற இணையதள பதிவு கட்டாயம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன்பெற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன்பெற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தோட்டக்கலை திட்டங்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-23-ம் நிதியாண்டு முதல் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இணைய வழி பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https:--tnhorticulture.tn.gov.in-tnhortnet- என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டிற்கு நாகை மாவட்டத்தில் 420 எக்டேர் பரப்பளவில் மா, கொய்யா, நெல்லி மற்றும் உயர்தர காய்கறி விதைகள் பயிரிட ரூ.5 கோடியே 90 லட்சமும், நுண்ணீர் பாசனம், நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த ரூ.46 லட்சத்து 35 ஆயிரமும் நிதி பெறப்பட்டுள்ளது.

இணையதள பதிவு கட்டாயம்

பனை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் மற்றும் 75 சதவீத மானியத்தில் பனை மரம் ஏறுவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. பனைமரம் ஏறுவதற்கு சிறந்த எந்திரங்களை கண்டுபிடிப்பவர்கள் மாநில குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.மேற்கண்ட அனைத்து திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அடிப்படை விவரங்களை இணைய வழியில் பதிவு செய்து கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story