நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் சிறப்பு பயிற்சி
3 மாவட்டங்களை சேர்ந்த நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் சிறப்பு பயிற்சி
விழுப்புரம்
ஆன்லைன் சிறப்பு பயிற்சி
தமிழகம் முழுவதும் நகர் ஊரமைப்புத்துறையின் மனைப்பிரிவு அனுமதிக்கு விண்ணப்பித்தல் மற்றும் ஒப்புதல் வழங்குவதற்கு ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இப்பயிற்சியை இணை இயக்குனர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல்
மேலும் இணையதளம் மூலமாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.