ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்


ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் ஊராட்சி தலைவர்கள் மட்டுமே ேதசியக்கொடி ஏற்ற வேண்டும் என கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமுதப்பெருவிழா

இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் நேற்று முதல் நாளை(திங்கட்கிழமை) 3 நாட்கள் தேசியக்கொடியை அவசியம் பறக்க விட வேண்டும்.மேலும் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

குழப்பம் விளைவித்தால் நடவடிக்கை

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியக்கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசியக்கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் ஊராட்சிகள் உதவி இயக்குனர் 9342215420,04364-291212 / 04364-291387 தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.தேசிய கொடியினை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story