ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்


ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஊட்டி அய்யப்பன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அய்யப்பன் கோவில்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

இதேபோல் நேற்று முன்தினம் காலையில் பிரம்ம கலச பூஜை, பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை நிகழ்ச்சிகள் நடந்தன.

புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடந்தது. இதில் கேரள மாநிலம் தீயன்னூர் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது சுவாமியே... சரணம் அய்யப்பா என்று பக்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதன் பின்னர் நடந்த மகா அன்னதானத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story