ஊட்டி கோ-ஆப்டெக்சில் இந்த ஆண்டு ரூ.130 லட்சம் விற்பனை குறியீடு அறிவிப்பு-கலெக்டர் அம்ரித் தகவல்


ஊட்டி கோ-ஆப்டெக்சில் இந்த ஆண்டு ரூ.130 லட்சம் விற்பனை குறியீடு அறிவிப்பு-கலெக்டர் அம்ரித் தகவல்
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கோ-ஆப்டெக்சில் இந்த ஆண்டு ரூ.130 லட்சம் விற்பனை குறியீடு அறிவிப்பு-கலெக்டர் அம்ரித் தகவல்

நீலகிரி

ஊட்டி

ஊட்டி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2022 சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேரூதவி புரிந்து வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.41.17 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.130 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி-2022 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், முதல்நிலை மண்டல மேலாளர் வெற்றிவேல், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் சபீனா நாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story