ஊட்டி வட்டார அளவிலான செஸ் போட்டி


ஊட்டி வட்டார அளவிலான செஸ் போட்டி
x

ஊட்டியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 20-ந் தேதி வட்டார அளவிலான செஸ் போட்டி 4 இடங்களில் நடந்தது. இதில் மாணவர்கள் 512 பேர், பெண்கள் 418 பேர் என மொத்தம் 930 பேர் கலந்துகொண்டு விளையாடினர். ஊட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த வட்டார அளவிலான செஸ் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ், உடற்கல்வி ஆய்வாளர் ராஜேஸ் உடனிருந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.


Next Story