ஊட்டி மலைரெயில் இன்றும் ரத்து


ஊட்டி மலைரெயில் இன்றும் ரத்து
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மலைரெயில் இன்றும் ரத்து

நீலகிரி

கோத்தகிரி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைரெயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகளும், மரங்களும் விழுந்தன. இதனால் 14-ந் தேதி முதல் நேற்று வரை மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மலைரெயில் பாதையில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றி சீரமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்தது. எனினும் தண்டவாள சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடையாததால், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை(திங்கட்கிழமை) முதல் மீண்டும் மலைரெயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story