பொன்மலைக்கு வந்த ஊட்டி மலைரெயில் பெட்டி


பொன்மலைக்கு வந்த ஊட்டி மலைரெயில் பெட்டி
x

பராமரிப்பு பணிக்காக ஊட்டி மலை ெரயில் பெட்டி திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

திருச்சி

பராமரிப்பு பணிக்காக ஊட்டி மலை ெரயில் பெட்டி திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

பொன்மலை பணிமனை

திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் ெரயில் என்ஜின்கள், ரெயில் பெட்டிகள் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்பெட்டிகள், என்ஜின்கள் பழுதுபார்ப்பதற்காக பொன்மலை பணிமனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஊட்டியில் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக மலை ெரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ெரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக பொன்மலை ெரயில்வே பணிமனைக்கு கொண்டுவரப்படும்.

பராமரிப்பு பணி

மலை ெரயில் பெட்டி பழுது நீக்கப்பட்டு புதிதாக அழகிய வர்ணம் தீட்டப்பட்டு ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஊட்டியிலிருந்து ராட்சத லாரி மூலம் பராமரிப்பு பணிக்காக மலைரெயில்பெட்டி நேற்று பொன்மலை பணி மனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்னும் சில நாட்களில் அதன் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே இங்கு 4 ஊட்டி மலை ெரயில் என்ஜின்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு ஊட்டிக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் திருச்சி பொன்மலையிலிருந்து பயன்படாத பழைய ெரயில் பெட்டிகளை உடைப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் லாரிகள் மூலம் எடுத்து சென்றனர்.


Next Story