ஊட்டி ஓரியண்டல் அணி முதலிடம் பிடித்தது
பி டிவிஷன் இறுதி போட்டியில் ஊட்டி ஓரியண்டல் அணி முதலிடம் பிடித்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து லீக் போட்டிகள் கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. பி டிவிஷன் பிரிவில் மொத்தம் 10 அணிகள் பதிவு செய்தன. இந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டிகளில் ஊட்டி ஓரியண்டல் அணி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி அதிக புள்ளிகள் பெற்று முதல் 2 இடத்தில் இருந்தன. இந்த லீக் போட்டியின் கடைசி போட்டி ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஓரியண்டல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மொத்தம் 25 புள்ளிகளை பெற்று அந்த அணி முதலிடத்தை பிடித்தது. மேலும் பி டிவிஷனில் முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், கால்பந்து கழக தலைவர் மணி, துணைத்தலைவர் மனோகரன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினர்.