ஊட்டி ஸ்பார்டன் அணி சாம்பியன்


ஊட்டி ஸ்பார்டன் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ஸ்பார்டன் அணி சாம்பியன்

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து தலா 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இந்தநிலையில் ஏ டிவிஷன் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளை எடுத்த ஊட்டி ஸ்பார்டன் மற்றும் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. தலா 35 ஓவர்களை கொண்ட இறுதி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி ஸ்பார்டன் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. இந்த அணியை சேர்ந்த வீரர் சபரி 96 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்தார். குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆர்மான் மேத்யூஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 210 பந்துகளில் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணியின் வீரர் யதுஷ் போஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஊட்டி ஸ்பார்டன் அணி வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான சாம்பியன் ஆனது.


Next Story