ஊட்டி அணி வெற்றி
ஊட்டி அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் லீக் போட்டியில் ஊட்டி கேலக்சி அணி மற்றும் குன்னூர் ஒண்டர் லெவன் அணி பங்கேற்று விளையாடின. இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த குன்னூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் கிளைவ் 62 ரன்கள், வினோத் 59 ரன்கள் எடுத்தனர். ஊட்டி அணியின் பந்துவீச்சாளர் சூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 210 பந்துகளில் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய ஊட்டி அணி 31.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் கிளிப்பர்டு 67 ரன்கள், சதீஷ் 36 ரன்கள், சூர்யா 35 ரன்கள் மற்றும் ராஜ்குமார் 32 ரன்கள் எடுத்தனர். ஒண்டர் லெவன் அணியின் பந்து வீச்சாளர்கள் உமர்ஷெரீப், வினோத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.