புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
மெலட்டூரில் வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மெலட்டூர்;
மெலட்டூரில் வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வேளாண்மை விரிவாக்க மையம்
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரில் செயல்பட்டு வந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் மெலட்டூரில் செயல்பட்டு வந்த வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் மற்றும் உரக்கிடங்கு ஆகியவற்றை மெலட்டூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்னப்பன்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக அங்கேயே தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் உரம், விதைகள், என தங்களது அனைத்து தேவைக்கும் அன்னப்பன்பேட்டை செல்ல வேண்டி இருந்தது.எனவே பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பயன்பாட்டுக்கு....
. விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்று மெலட்டூரில் பழுதடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் பயனற்று கிடக்கிறது.எனவே மெலட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடத்தை அரசு உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு ெகாண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.