நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
மெலட்டூர் அருகே கோவத்தக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பாா்த்து உள்ளனர்.
மெலட்டூர்;
மெலட்டூர் அருகே கோவத்தக்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பாா்த்து உள்ளனர்.
அறுவடை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள கோவத்தக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல 100 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கி விட்டனர். கோவத்தகுடி அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கடந்த ஒரு வார காலமாக காத்திருக்கிறார்கள்.
கொள்முதல் பணி
இன்னும் சில விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் விட்டு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே விவசாயிகளின் சிரமத்தை அரசு உணர்ந்து உடனடியாக கோவத்தக்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல் கொள்முதல் பணியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.