உத்தமபாளையம் அருகே பி.டி.ஆர். கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு


உத்தமபாளையம் அருகே பி.டி.ஆர். கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு
x

உத்தமபாளையம் அருகே பி.டி.ஆர். கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி

முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கால்வாய் மற்றும் 18-ம் கால்வாயில் கடந்த வாரம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கால்வாயில் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடையன்குளம், வள்ளியம்மன் குளம், கோம்பை புதுக்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, மதகை திறந்து கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீரை திறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, அனுமந்தன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுந்தரி பாஸ்கரன், தேனி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story