இளையான்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் அலுவலகம் திறக்கப்பட்டது.
உறுப்பினர்கள் அலுவலகம் திறப்பு
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சியின் 1-வது வார்டு மற்றும் 2-வது வார்டு உறுப்பினர்கள் அலுவலக திறப்பு விழா புதூரில் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் தலைவர் தவுலத் கான் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்று பேசினார். தமிழரசி எம்.எல்.ஏ. புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகிம், விவசாய சங்க தலைவர் தமிழரசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சைபு நிஷா பேகம், ராவியத்துல் பதவியாள் மற்றும் கவுன்சிலர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சாதிக் அலி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story