அலேகுந்தாணி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு


அலேகுந்தாணி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 1:00 AM IST (Updated: 11 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகுந்தாணி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா மற்றும் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் அ.தி.மு.க. துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அலேகுந்தானி கிராமத்தில் அ.தி.மு.க. கொடியை அவர் ஏற்றி வைத்தார். இதில் கிராமமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story