ஆண்டவர் என்டர்பிரைசசின் டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
ஆண்டவர் என்டர்பிரைசசின் டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஒரே டைல்ஸ் ஷோரூம் ஆண்டவர் என்டர்பிரைசஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை சீனிவாசா மார்பிள்சின் உரிமையாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, டைல்ஸ் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். ஷோரூமின் முதல் விற்பனையை பிரிசம் ஜான்சன் லிமிடெட்டின் டி.ஜி.எம். சாந்தப்பன் ராஜ் தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை புதுக்கோட்டை பொதுப்பணித்துறையின் ஏ கிளாஸ் கான்ட்ராக்டரின் உரிமையாளரும், மாவட்ட கவுன்சிலருமான செல்வம் பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஆண்டவர் என்டர்பிரைசசின் டைல்ஸ் ஷோரூமின் பங்குதாரர்களான ஆர்.எம்.யோகநாதன், கே.ஹரிஹரன் ஆகியோர் வரவேற்றனர். ஆண்டவர் என்டர்பிரைசஸ் டைல்ஸ் ஷோரூமில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஜான்சன், கஜாரியா, நுசெரா உள்ளிட்டவைகளின் டைல்ஸ்களும் மற்றும் அனைத்து முன்னணி நிறுவனங்களின் டைல்ஸ்களும் இந்த ஷோரூமில் கிடைக்கும் என்று, அதன் பங்குதாரர்கள் தெரிவித்தனர்.