அன்னை ஹாஜிரா கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரியில் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் (2019-2020) நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளருமான ஜெ.விஜிலா சத்யானந்த் முன்னிலை வகித்தார்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாதிக் கல்வி கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.செய்யது அஹமது, செயலாளர் எஸ்.கே.குதா முஹமது, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story