கேலோ இந்தியா போட்டிகள் மூலம் கனவு நனவாகியுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கேலோ இந்தியா போட்டிகள் மூலம் கனவு நனவாகியுள்ளது:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Jan 2024 6:22 PM IST (Updated: 19 Jan 2024 7:07 PM IST)
t-max-icont-min-icon

6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் தொடங்கியது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விழாவில் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகம் மிகப்பெரிய விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ளது. முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்டன. கேலோ இந்தியா போட்டிகள் மூலம் கனவு நனவாகியுள்ளது.

2021 ஆண்டில் இருந்து மாநில இந்திய மற்றும் உலக அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விளையாட்டு கிட்-களை வழங்க உள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்திக்காட்டியது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்



Next Story