தா.பழூரில் புதிய ரேஷன் கடை திறப்பு


தா.பழூரில் புதிய ரேஷன் கடை திறப்பு
x

தா.பழூரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிராமத்தில் தா.பழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. தா.பழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் இளவரசன் வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். தா.பழூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்க தலைவர் குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தா.பழூர் ரேஷன் கடையில் ஏற்கனவே 1,126 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதிதாக தொடங்கப்பட்ட ரேஷன் கடைக்கு ஏற்கனவே உள்ள கடையிலிருந்து 505 ரேஷன் கார்டுகள் தனியாக பிரிக்கப்பட்டு புதிய ரேஷன் கடையில் இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஒரே ரேஷன் கடையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக புதிய ரேஷன் கடை உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story