ரூ.29 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறப்பு


ரூ.29 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறப்பு
x

ரூ.29 லட்சத்தில் சிறுவர் பூங்கா திறப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக்நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறுவர் பூங்காவை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story