புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு


புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
x

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான புகார்கள் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

வேலூர்

கட்டுப்பாட்டு அறை

வேலூர் மாவட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1.000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் நேற்று முதல் வீடு, வீடாக வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் முகாம் அன்று பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உரிமைத்தொககை பெறுவது சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தீர்த்துக் கொள்வதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

அரசின் இத்திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் தொடர்பாக சந்தேகம் அல்லது புகார்கள் இருந்தால் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பங்கள் பதிவு செய்தல் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். சுழற்சி முறையில் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர தாலுகா அலுவலகம் மூலமும் பொதுமக்களின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story