கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு


கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு
x

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையத்தை காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார்.

கொரோனா பரிசோதனை மையம்

கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் ரூ.1.35 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காலையில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது அரசுமருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், உதவி கலெக்டர் மகாலட்சுமி, மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் பொன்இசக்கி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமல வாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்,

நாளொன்றுக்கு 600 மாதிரிகள்

கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், இதுவரை தூத்துக்குடி, நெல்லை அனுப்பி முடிவுகள் தெரியப்பட்டது. இங்கு தொடங்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் 4 மணி நேரத்திற்கு 96 சளி மாதிரிகள் எடுக்கப்படும். ஒரு நாளைக்கு 600 மாதிரிகளை எடுத்து பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும். முடிவுகள் உடனுக்குடன் தெரிவதால் நோய் தாக்கம் பற்றி அறிந்து, டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக, இந்த மையம் அமைந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் நுண் உயிரியல் தலைவர் ரேச்சல் ரீனா, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் தம்பிரான், உதவி செயற் பொறியாளர் கெங்கா பரமேஸ்வரி, உதவி பொறியாளர் விமலா, தாசில்தார்கள் சுசிலா, ராஜ்குமார், கோவில்பட்டி நகரசபைதலைவர் கா. கருணாநிதி, துணை தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து யூனியன் ஆணை யாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன்,

தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிலைய மருத்துவ அலுவலர் பூவேஸ்வரி நன்றி கூறினார்.

விவசாயிகளுக்கு கடனுதவி

இதை தொடர்ந்து கயத்தாறு தாலுகா ஆசூர்தலைவாய்புரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் நடந்த நிகழ்ச்சியில், ஆசூர், தளவய்புரம், சிவஞானபுரம், காப்புலிங்கம்பட்டி, நாகம்பட்டி, குமாரகிரி உள்பட 13 கிராமங்களை ேசர்ந்த 23 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன்கள் ரூ.7 லட்சத்து 96 ஆயிரத்துக்கான காசோலைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி, ஆசூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், துணை தலைவர் மாரிமுத்து, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வங்கி தலைவர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

மேலும் கடந்த 1999-ம் ஆண்டு நாகம்பட்டி சாலையிலுள்ள தாம்போதியில் காட்டாற்று வெள்ளத்தில் நான்குபேர் அடித்து செல்லப்பட்டு பலியானார். இதில் பாலம் அமைத்து தரவேண்டிய அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.


Next Story