நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தின குமார், விவசாயிகள் சங்க தலைவர் வேணு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆயக்காரன்புலம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்தார். அப்போது ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும் வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நாகை முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.