மின்வாரிய அலுவலகம் திறப்பு
கடையநல்லூர் அருகே மின்வாரிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே நயினாரகரம் ஐ.ஓ.பி. வங்கி எதிரில் சேனைத்தலைவர் தெருவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கு இட நெருக்கடி காரணமாக அங்கிருந்து நயினாரகரம் பஸ் நிறுத்தும் அருகில் மெயின் ரோடு பகுதியில் அலுவலகம் இடமாற்றப்பட்டு திறப்பு விழா நடந்தது.
நெல்லை பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருசாமி திறந்து வைத்தார். தென்காசி கோட்ட பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் தலைமை தாங்கினார். கடையநல்லூர் உதவி செயற்பொறியாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். நயினாரகரம் பிரிவு உதவி மின்பொறியாளர் மைதீன் அபுசுபி வரவேற்றார். உதவி மின் பொறியாளர்கள் சின்னத்துரை, அருண், முகமது ரபி, கோமதி, ஹபிபுல்லா, அனிதா, சுகுணா, சஞ்சிதா, கலைராணி, கண்ணன், மகேஷ், பிரகாஷ், உதவி செயற்பொறியாளர்கள் முத்துக்குமார், முத்தையா, பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.