வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகம் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இன்பராஜ் வரவேற்றார். இதில் கள்ளக்குறிச்சி மூத்த வணிகர் கமலா பல்பு நிறுவனர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் முத்து, நிர்வாக குழு உறுப்பினர்கள் வைத்திலிங்கம், சவுந்தர்ராஜன், கிளைச்சங்க நிர்வாகிகள் பாபுராஜ், ஆழ்வார், கரிகாலன் ரமேஷ் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story