வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவி மையம் திறப்பு


வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவி மையம் திறப்பு
x

அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

உதவி மையம்

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கீழ் கடந்த 16 ஆண்டுகளாக அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இம்மாவட்டத்தின் 11 வட்டாரங்களில் அதாவது அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, சாத்தூர், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், வெம்பக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் விவசாய பெருமக்களின் குறைகளை பெற்று தீர்வு செய்ய இந்நிலையத்தில் உதவி மையத்தை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் திறந்து வைத்தார்.

இந்த உதவி மேடை முயற்சிக்கு வேளாண் அறிவியல் நிலையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், சக விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.

பாராட்டு

மேலும் இந்நிகழ்ச்சியின் வேளாண் விரிவாக்க மைய இயக்குனர் முருகன் இணைய வழி மூலம் கலந்துகொண்டு இம்முயற்சிக்கு நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபுவிற்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

விவசாயிகளின் குறைகள் மற்றும் சந்தேகங்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு தர கேட்டுக் கொண்டார். இதில் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story