மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு


மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
x

மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2021-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.2 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 தளத்துடன், 30 படுக்கை வசதியுடன் கட்டிடம் கட்டப்பட்டது. குடியாத்தம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு அமலு விஜயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, சப்- கலெக்டர் வெங்கட்ராமன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், வட்டார மருத்துவ அதிகாரி கலைச்செல்வி, ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, சொர்ணலதா, ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் உத்ரகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா, மேல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இளையரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Next Story