மருத்துவ மையம் திறப்பு


மருத்துவ மையம் திறப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டது

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அறநிலையத்துறை சார்பில் மருத்துவ மையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சங்கர நாராயணசாமி கோவில் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய மருத்துவ மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ மையத்தில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 பன்னோக்கு பணியாளர்கள் பணிபுரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நிர்வாகிகள் வாழைக்காய் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டியன், கேபிள் கணேசன், சுற்றுச்சூழல் அணி அழகுதுரை, மாவட்ட மைய மருத்துவர்கள் விஷ்ணு, விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை-மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் சங்கரன்கோவில் ஒன்றியம் சார்பாக வட்டார வள மையத்தில் நடந்தது. போட்டியை ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கர பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், எறிபந்து விளையாட்டு போன்றவை நடைபெற்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள 35 மாற்றுத்திறன் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவில் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் இளைஞரணி சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Next Story