ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு


ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு
x

அம்பையில் ரூ.50 லட்சத்தில் புதிய பாலம் திறக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை- கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோவில் அருகில் நதியுண்ணி கால்வாய் பாலம் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிக்காக கடந்த மே மாதம் அகற்றப்பட்டு சுமார் ரூ.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் பாண்டியன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் விஷ்ணுவர்தன் முன்னிலை வகித்தார். சாலை பணியாளர் தனுஷ்கோடி ரிப்பன் வெட்டி புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

விழாவில் நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் என்ற கேபிள் கண்ணன், நகர வியாபாரிகள் சங்க தலைவர் பண்ணை சந்திரசேகரன், கூடுதல் அரசு வக்கீல் காந்திமதிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story