ரூ.13¾ லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
கோவிந்தாங்கல் கிராமத்தில் ரூ.13¾ லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கோவிந்தாங்கல் கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பழனி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன் கலந்து கொண்டு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்து 389 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான 1,000 ரூபாய், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கினார்கள். மாவட்ட பிரதிநிதி சக்கரவர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் குமுதாதண்டபாணி, கிளை செயலாளர் மகாலிங்கம், சண்முகம், தாளிக்கால் விஜயகுமார், விற்பனையாளர் தண்டபாணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.