புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
ஆற்காடு அருகே புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சி தென்னந்தியாலம் கிராமத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் வளர்மதி ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், துணைத்தலைவர் குல்சார் அஹமத், ஜி.கே.உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, வாலாஜா தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story