பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் திறப்பு
வாலாஜா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் திறக்கப்பட்டது.
வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் பிரத்யேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, நகரமன்ற தலைவர் ஹரிணி, துணைத் தலைவர் கமலராகவன், நகர செயலாளர் தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மைய கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்த மையத்தில் பிறந்தவுடன் அழாத குழந்தைகள், மூச்சு திணறல் ஏற்படும் குழந்தைகள், நோய் தொற்று ஏற்பட்ட குழந்தைகள், மஞ்சள் காமாலை பாதித்த குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், குழந்தைகள் நல மருத்துவர்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ் மற்றும் செவிலியர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.