ரூ.2 லட்சம் செலவில் பூங்கா-விளையாட்டு மைதானம் திறப்பு
ரூ.2 லட்சம் செலவில் பூங்கா-விளையாட்டு மைதானம் திறப்பு
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலை மீனாட்சி நகரில் இளைஞர்கள், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் புதிதாக பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இதனை நேற்று டி.ஆர். பி.ராஜா எம்.எல்.ஏ திறந்து வைத்து அங்கிருந்தவர்களுடன் இறகு பந்து விளையாடினார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், வர்த்த சங்க மாநில துணைத்தலைவர் ஞானசேகரன், நகர தி.மு.க. செயலாளர் வீரா.கணேசன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் டி.எஸ்.டி.முத்துவேல், சித்தேரிசிவா, நகர சபை துணைத்தலைவர் கைலாசம், வர்த்தக சங்க தலைவர் ஆ.வி.ஆனந்த், நகரமன்ற உறுப்பினர் ஆசியா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story