பகுதி நேர ரேஷன் கடை திறப்பு


பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
x

வாலாஜா அருகே பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்துவைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த அனந்தலை ஊராட்சியில் உள்ள திருமலை நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் நந்தகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் விலைக் கடையை ரிப்பன் வெட்டி திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார்.


Next Story