செய்யாறு பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை திறப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக செய்யாறு பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்பட்டது.
செய்யாறு
செய்யாறு பஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பாலூட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்பட்டது. இதன் மூலம் பாலூட்டும் தாய்மார்கள் பெரும் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த அறை கடந்த சில மாதங்களாகவே பூட்டியே வைத்திருந்ததால் பாலூட்டும் தாய்மார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, மீண்டும் பாலூட்டும் அறையை திறந்து சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக செய்யாறு பஸ் நிலையத்தில் பயன்படுத்த முடியாமல் பூட்டி வைத்திருந்த பாலூட்டும் தாய்மார்கள் அறையினை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய சிரமத்தை போக்க நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்திற்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழிக்கு நன்றி தெரிவித்தனர்.