ஆற்றூரில் செல்பி பாயிண்ட் திறப்பு;அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் பங்கேற்பு


ஆற்றூரில் செல்பி பாயிண்ட் திறப்பு;அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் பங்கேற்பு
x

ஆற்றூரில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

ஆற்றூரில் செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

செல்பி பாயிண்ட்

ஆற்றூர் சந்திப்பில் "அழகிய ஆற்றூர்" என்ற பெயர் கொண்ட செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு செல்பி பாயிண்டை திறந்து வைத்தார். குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் புறாவை பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்துடன் செல்பி எடுத்து கொண்டார்.

முன்னதாக கல்லுப்பாலம் பகுதியில் மரக்கன்று நடுதல், புனித அந்திரையாஸ் காலனியில் மழைநீர் வடிகால் மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் புதிய சந்தையில் வணிக வளாகம் அமைக்க ஆய்வு செய்ததுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஆற்றூர் பேரூராட்சியும் இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி சேவைத்திட்டங்களை தொடங்கி வைத்தனர். பரளியாற்றில் தடுப்பணை மற்றும் படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக மேம்பாடு செய்வது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். தாமிரபரணி ஆற்றில் படித்துறை அமைக்கும் பணியை ெதாடங்கி வைத்து, 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிகளில் ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரன், தலைவர் பீனா அமிர்த ராஜ், துணைத்தலைவர் தங்கவேல், வார்டு உறுப்பினர் சிவன், திருவட்டார் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஜாண் பிரைட், ஒன்றிய துணை செயலாளர் ராஜூ, கண்ணனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜ், குமரன்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர் லிபின் வினோஸ், பொறியாளர் அணியைச் சேர்ந்த திலீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story