தூத்துக்குடியில் ஸ்ரீ கெங்கா பல் மருத்துவமனை திறப்பு
தூத்துக்குடியில் ஸ்ரீ கெங்கா பல் மருத்துவமனை திறக்கப்பட்டது.
தூத்துக்குடி அண்ணா நகர் மெயின்ரோட்டில் புதிதாக ஸ்ரீ கெங்கா பல் மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பல்மருத்துவ மனையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், கெங்கா குரூப்ஸ் தலைவர் காசிராஜன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசுவாமி, அகிலாண்டபுரம் பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகரன், தி.மு.க பகுதி செயலாளர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், கெங்கா ஸ்கேன் சென்டர் டாக்டர் பாரதி கண்ணன், விஜயம் கிளினிக் டாக்டர் சுமதி கண்ணன், டாக்டர் கார்த்திக், வாசன் டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர்கள் சீனிவாசன், விக்னேஷ், ஸ்ரீகெங்கா பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சியாமளா கவுரி, சத்யநாராயணன், விஜயா, ராஜம், கவுசல்யா, சாதிக், நிலா, நதி, நித்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்