ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை திறப்பு


ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை திறப்பு
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தட்டப்பாறை, தருவைகுளம், மணியாச்சி, புளியம்பட்டி, பசுவந்தனை, எப்போதும்வென்றான், பசுவந்தனை, நாரைக்கிணறு, கடம்பூர் மகளிர் ேபாலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட வழக்குகளை விசாரிக்க ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நாளைமறுநாள்(வெள்ளிக்கிழமை) காலையில் ஓட்டப்பிடாரம்-குறுக்குச்சாலை தனியார் கட்டடத்தில் திறப்புவிழா நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். குருமூர்த்தி கோர்ட்டை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாலாஜி மற்றும் நீதிபதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


Next Story