கடையம் ராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


கடையம் ராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் ராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில்உள்ள வெங்கடேசபெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் பெருமாள் தாயார்களுடன் அனந்த சயனகாட்சி கோலத்தில் காட்சியளித்தலும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு கும்பஜெபம், வேதபாராயணம், சிறப்பு திருமஞ்சனம், சகஸ்கரநாம அர்ச்சனை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

அதனை தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு விழாவும், பெருமாள் தாயார்களுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா, இரவில் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. கடையம் ராமசாமி கோவில் ராமர் சீதையுடன் அனந்த சயன கோலத்தில் காட்சியளித்தல், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து மாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


Next Story