ரெங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


ரெங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

திருமக்கோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

திருமக்கோட்டை,:

திருமக்கோட்டை மகாராஜபுரம் கிராமத்தில் உள்ள ெரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ெரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.


Next Story