கால்நடை துணை சுகாதார நிலையம் திறப்பு


கால்நடை துணை சுகாதார நிலையம் திறப்பு
x

கால்நடை துணை சுகாதார நிலையம் திறப்பு

திருவாரூர்

திருமக்கோட்டை அருகே உள்ள தென்பரை கிராமத்தில் கால்நடை துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இதில் கால்நடைகள் மாவட்ட மண்டல இயக்குனர் அமிர்தாஅலி, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, ஒன்றிய தலைவர் மணிமேகலை முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணிமோகன், ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஆர். தேவதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாளையக்கோட்டை ஊராட்சியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து மேலநத்தம் கிராமத்தில் கால்பந்தாட்ட நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர், திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையத்தை திறப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். பி்ன்னர் ராஜகோபாலபுரத்தில் சாலை பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.


Next Story